அரசு பள்ளிகளில் ரூ.1,050 கோடியில் புதிய வகுப்பறைகள் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (20:01 IST)
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தரமான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


கடந்தாண்டு தமிழகத்தில் நடந்த சட்டபேரவைத் தேர்தலில் திமுக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை அமைந்துள்ளது.

இந்த ஆட்சியில் பல முக்கிய அறிவிப்புகள் மாணவர்களுக்கும், மக்களுக்கும் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று சட்டபேரவையில் விதி 110ன்  கீழ் முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ரூ.1,050 கோடியில் புதிதாக 7,200 வகுப்பறைகள் கட்டப்படும் என்றும், நடப்பாண்டில் 15 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளகளில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சராகும் நிதிஷ்குமார்.. இந்த முறையும் அப்படித்தான்..!

புலி இன்னமும் சக்தியோடு தான் உள்ளது: நிதிஷ் குமார் இல்ல வாசலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

பிகார் சட்டப்பேரவை தேர்தல்: மண்ணை கவ்விய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி..!

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு..!

வாரத்தின் கடைசி நாளில் திடீரென சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments