Publish Date: Mon, 03 Mar 2025 (11:58 IST)
Updated Date: Mon, 03 Mar 2025 (12:01 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் 7940 ரூபாய் என்ற விலையில் விற்பனையான நிலையில் அதே விலை தான் நேற்றும் இன்றும் விற்பனையாகி வருகிறது என்றும் விலையில் மாற்றமில்லை என்றும் சென்னை நகையாவாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலைமாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 7,940 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ரூபாய் 63,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,662 எனவும் ஒரு சவரன் ரூபாய் 69,296 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 106.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 106,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது