Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதுக்குள்ள இன்னொன்னா? ஹாட்ரிக் அடிக்கும் புயல்!? மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (09:24 IST)
வங்க கடலில் உருவான புரெவி புயல் நாளைக்குள் கரையை கடக்க உள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் வங்க கடலில் உருவான நிவெர் புயல் காரைக்கால் அருகே கரையை கடந்தது. அது கரையை கடந்த அன்றே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி புயலாக மாறியது. புரெவி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் இலங்கை வழியாக தற்போது கன்னியாக்குமரி – பாம்பன் இடையே கரையை கடக்க நெருங்கி வருகிறது. நாளைக்குள் புயல் கரையை கடக்கும் என்றும், கரையை கடக்கும் பகுதியில் 95 கி.மீ முதல் 100 கிமீ வரை சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை புரெவி கரை கடக்கும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வங்க கடலில் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமானை ஒட்டிய வங்க கடலில் உருவாகும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுமா என்பது வரும் நாட்களில் தெரிய வரும் என்றாலும், அடுத்தடுத்து புயல்கள் தமிழகம் நோக்கி கரையை கடப்பது மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாற்றுத்திறனாளி இளைஞரை தாக்கினாரா திமுக நிர்வாகியின் உதவியாளர்? கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!

நேபாள போராட்டம்: சிக்கி தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

காங்கிரஸ் எம்.எல்.ஏ சதீஷ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் திடீர் கைது.. துணை முதல்வர் கண்டனம்.!

கத்தாரை தாக்கிய இஸ்ரேல்! நான் காரணம் இல்லை நேதன்யாகுதான்..! நழுவிய ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments