2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக புதிய நிர்வாகிகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்வு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது
பழைய நிர்வாகிகளை வைத்துக்கொண்டு 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முடியாது என்றும் எனவே இளம் ரத்தம் பாய்ச்சிய புதிய நிர்வாகிகளை பாஜக தமிழக பாஜகவில் நியமனம் செய்ய வேண்டும் என அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
எனவே தமிழக பாஜகவில் உள்ள சீனியர் நிர்வாகிகள் பலரும் பதவியிலிருந்து தூக்கி அடிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக பாஜகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது