இந்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ள நிலையில் அதுகுறித்த மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தியா – சீனா இடையே லடாக் எல்லையில் நடந்த மோதலை தொடர்ந்து இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சீனாவிலிருந்து இந்தியவைல் அதிகமாக உபயோகத்தில் உள்ள 59 அப்ளிகேசன்களை பாதுகாப்பு கருதி இந்திய அரசு தடை செய்துள்ளது.
அதில் மிகவும் பிரபலமான டிக்டாக், ஹலோ உள்ளிட்ட செயலிகளும் அடக்கம். டிக்டாக் பயனாளர்கள், பார்வையாளர்கள் அதிகம் பேர் உள்ளது போலவே, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் பலர் உள்ளனர். தற்போது இந்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்று நெட்டிசன்கள் பலர் மீம்களை ஷேர் செய்து வருகின்றனர்.
அவற்றில் சில உங்களுக்காக…