அசிங்கப்படுறதே வேலையா போச்சு! - நெட்டிசன்களிடம் சிக்கிய ஹெச்.ராஜா

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (10:17 IST)
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு தவறான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
சமீபத்தில் சென்னை ஐஐடி-யில்  மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதில் சமஸ்கிருத பாடலை மாணவர் பாடியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இதை கடுமையாக விமர்சித்தன. 
 
இந்நிலையில், ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு மாணவர் மற்றும் மாணவி முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு இது ‘வைகோ, ஸ்டாலின் கவனத்திற்கு: சென்னை IIT ல் தமிழ் பண்பாடு வளர்த்த போது” எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அது உண்மையில் 2014ம் ஆண்டு டெல்லியில் நடந்த சம்பவம். கல்லூரி மாணவர்கள் முத்தப் போரட்டங்களை நடத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அதை தவறுதலாக, சென்னை ஐஐடி-யில் நடந்தது என ஹெச்.ராஜா தவறுதலாக குறிப்பிட்டிருந்தார்.

 
இதனால் பொங்கியெழுந்த நெட்டிசன்கள், இது கூட தெரியதா? அசிங்கப்படுறதே வேலையா போச்சு’ என்கிற ரேஞ்சில் கிண்டலடித்து கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். பலர் ஹெச்.ராஜாவை ஏகத்துக்கும் ஒருமையில் திட்டி டிவிட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் ரவியை திடீரென சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி.. என்ன காரணம்?

சென்னையில் ஆபரண தங்கம் விலை மீண்டும் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

பொங்கல் பரிசுத்தொகை ரூ.3000.. அதிகாரபூர்வ அறிவிப்பு.. கிடைப்பது எப்போது?

சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த தாய்-மகன் கைது.. 4,200 போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மாற்றமில்லை.. திடீர் முடிவெடுத்த அதிகாரிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments