Publish Date: Wed, 28 Feb 2018 (09:46 IST)
Updated Date: Wed, 28 Feb 2018 (09:50 IST)
உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயேந்திரர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து சங்கரமடம் திரும்பிய அவர் ஓய்வு எடுத்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.