Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மன்னிப்பு கேட்டா போதுமா?!.. ஒழுங்கா பேசணும்!.. எஸ்.வி.சேகரை வெளுக்கும் நெட்டிசன்கள்..

Advertiesment
sv sekar
சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி அருகே உள்ள விளாத்திகுளம் வேடநத்தம் என்கிற ஒரு கிராமத்தில் பள்ளி சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஏற்கனவே பாலியல் குற்றத்தை செய்து சிறையில் இருந்துவிட்டு ஜாமினில் வெளியே வந்த தர்ம முனிஸ்வரன் என்பவரை சிசிடிவி கேமரா அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா போதையில் போதை தலைக்கேறி தான் அந்த குற்றத்தை செய்ததாக தர்ம முனீஸ்வரன் வாக்குமூலம் அளித்திருக்கிறார். போதையில் சிறுமியை மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் கொடுத்த வாக்குமூலம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

பள்ளி சிறுமி தனது வீட்டுக்கு அருகே உள்ள அந்த காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்ற போதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்நிலையில்தான், செய்தியாளரக்லிடம் பேசிய எஸ்.வி.சேகர் ‘அந்த சிறுமி எதற்காக புதருக்கு போனார்?.. புதருக்கெல்லாம் போலீஸ் லைட் போட முடியுமா?. எல்லா இடத்திற்கும் போலீஸ் செல்ல முடியுமா?.. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.. என பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார் எஸ்.வி. சேகர்.

தனது எக்ஸ் தளத்தில் ‘யாரையும் குறிப்பாக இறந்து போனவர்களை பற்றி தவறாக பேசுவது தவறு என நினைப்பவன் நான். நேற்று  பொதுவாக பெண்களுக்கு பெற்றோர் அதிக பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக கருதுகிறேன். சம்மந்தப்பட்ட அனவருக்கும் என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்’ என பதிவிட்டிருக்கிறார்.

ஆனாலும், மன்னிப்பு கேட்டால் போதாது.. பெண்கள் என்றால் கேவலமா?.. ஒழுங்கா பேச கத்துக்கோங்க. கழிப்பிட வசதி இல்லாத பல கிராமங்கள் இந்தியாவில் இருக்கிறது.. நாவடக்கம் தேவை என நெட்டிசன்கள் அவரை திட்டி வருகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி முகநூலில் கேவலாக பதிவிட்டு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் எஸ்.வி.சேகர். தொடர்ந்து அவரின் பேச்சு சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரம்பூர் தொகுதியில் விஜய் ஜெயிப்பாரா?!. வெற்றி வாய்ப்பு எப்படி?!.. ஒரு அலசல்!..