நெல்லை மாநகராட்சியின் ஏழாவது வார்டு பெண் கவுன்சிலர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்க மாநகராட்சி ஆணையர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாநகராட்சியில் மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையிலான மோதல் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் நிலையில் அது இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியின் ஏழாவது வார்டு திமுக கவுன்சிலர் இந்திரா மணி என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் அளித்திருக்கிறார்.
தன்னுடைய வார்டில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்றும் அதனால் தான் இந்த ராஜினாமா கடிதத்தை கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒரு கவுன்சிலர் ராஜினாமா கடிதத்தை மேயரிடம் தான் அளிக்க வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையரிடம் அளிக்கக்கூடாது என்றும் கூறி அந்த ராஜினாமாவை ஏற்க மறுத்த மாநகராட்சி ஆணையர் மறுத்துவிட்டார். மேலும் ராஜினாமா கடிதத்தை மேயர் இடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து கவுன்சிலர் இந்திரா மணி மேயரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.