இது முழுக்க முழுக்க பொய், யாரும் நம்பாதீங்க
சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் ஒரு தகவலை தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இது முழுக்க முழுக்க போய் யாரும் நம்ப வேண்டாம் என்று நெல்லை டெபுடி கமிஷனர் அர்ஜூன் சரவணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி வதந்தியாக பரவி வருகிறது. அதில் பெண்கள் தனியாக ஆட்டோ அல்லது வாடகை காரில் பயணம் செய்வதற்கு முன் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் அந்த வாகனத்தை காவல்துறை ஜிபிஆர்எஸ் மூலம் கண்காணிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது
இந்த தகவலை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நிலையில் இது உண்மையா என ஒரு டுட்டர் பயனாளி நெல்லை டெபுடி கமிஷனர் அர்ஜுன் சரவணன் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அர்ஜுன் சரவணன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியதாவது:
முழுக்க பொய்.
தமிழ்நாடு காவல்துறையில் இப்படி எந்த திட்டமும் இல்லை. பாதுகாப்பிற்காக “காவலன் SoS” செயலியை பயன்படுத்தவும் .
“கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்