Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரு மாடல் தோல்வியடைந்து விட்டது. சீர்திருத்த முயற்சிகள் செய்கிறோம்: அமைச்சர் ஜெய்சங்கர்

Mahendran
திங்கள், 16 டிசம்பர் 2024 (11:26 IST)
நேரு மாடல் தோல்வி அடைந்து விட்டது என்றும், தற்காலத்திற்கு ஏற்றவாறு சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த 'நேரு வளர்ச்சி மாடல்' என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துகொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "அந்த காலத்தில் இருந்த பொருளாதார கொள்கைகள் தற்போதைய நடைமுறைக்கு சரியாக வராது என சீனா, ரஷ்யா போன்ற நாடுகளே தங்களுடைய கொள்கைகளை மாற்றிக்கொண்டன. ஆனால் நம் நாட்டில் மட்டும் அப்போது இருந்த கொள்கைகளில் இருந்து விடுபட முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

நேருவின் வளர்ச்சி கொள்கைகள் நம் வெளியுறவு கொள்கை வரை விரிந்து இருந்தது. இது தவிர, அரசியல் நிர்வாகம், திட்டக் கமிஷன் உள்பட அவை அனைத்திலும் ஊடுருவி இருந்தது. நேரு மாடல் தோல்வி அடைந்துவிட்டது. கடந்த 33 ஆண்டுகளில் அவரது கொள்கைகள் எடுபடவில்லை.

எனவே, நேருவின் கொள்கைகள் தோல்வி அடைந்துவிட்டதே உணர்ந்து, 2014-இல் இருந்து அதை சீர்திருத்த முயற்சிகளை தொடங்கியுள்ளோம். இதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். வெளியுறவுத்துறை கொள்கையிலும் நம் நிலைப்பாட்டை மாற்றியுள்ளோம்," என்று பேசினார்.

நேரு குறித்த புத்தக வெளியீட்டு விழாவிலேயே, "நேருவின் கொள்கைகள் தோல்வி அடைந்துவிட்டது" என்று அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் மறைவு: கனிமொழி எம்பி, கமல்ஹாசன் இரங்கல்

வாரத்தின் முதல் நாளே சரியும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை விலை நிலவரம்..!

வங்கக்கடலில் தாமதமாகிறதா காற்றழுத்த தாழ்வு? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

ஹசீனா ஆட்சியில் 3,500 பேரை காணவில்லை: வங்கதேச விசாரணை ஆணையத்தின் அதிர்ச்சி அறிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments