இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரின் அபார சதங்கள் அடிப்படையில் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், மழை காரணமாக நேற்றைய ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று ஆஸ்திரேலியாவின் மூன்று விக்கெட்டுகள் மளமள என விழுந்தாலும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடினர். ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்கள் எடுத்து அவுட் ஆனார், அத்துடன் டிராவிஸ் ஹெட் 149 ரன்கள் எடுத்து இன்னும் களத்தில் நீடிக்கிறார்.
இந்திய தரப்பில் பும்ரா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நிதிஷ் குமார் ரெட்டி ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆஸ்திரேலியா 85 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் மிக வேகமாக சதங்களை அடித்துள்ளனர். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.