Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொதப்பும் டாப் ஆர்டர் பேட்டிங்.. மளமளவென விழுந்த 3 விக்கெட்கள்!

Advertiesment
சொதப்பும் டாப் ஆர்டர் பேட்டிங்.. மளமளவென விழுந்த 3 விக்கெட்கள்!

vinoth

, திங்கள், 16 டிசம்பர் 2024 (08:04 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரின் அபார சதத்தால் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம்  மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் நேற்று சிறப்பாக விளையாடிய ஆஸி ரன்களை அதிரடியாக சேர்த்தது.

இதையடுத்து தற்போது தங்கள் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்களை இழந்துள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஜெய்ஸ்வால், கில் மற்றும் கோலி ஆகியோர் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்தனர்.

தற்போது கே எல் ராகுல் 13 ரன்களோடு களத்தில் இருக்க உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது. பின் வரிசை பேட்ஸ்மேன்களாவது நிலைத்து நின்று இந்திய அணியைத் தேற்றுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்மித், டிராவிஸ் ஹெட் அபார சதங்கள்.. மின்னல் வேகத்தில் உயர்ந்த ஆஸ்திரேலியா ஸ்கோர்..!