Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடையாள அட்டையை மறந்துவிட்ட வந்த நீட் தேர்வு மாணவி: காவல்துறை அதிகாரியின் உதவி!

Advertiesment
அடையாள அட்டையை மறந்துவிட்ட வந்த நீட் தேர்வு மாணவி: காவல்துறை அதிகாரியின் உதவி!
, ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (19:58 IST)
அடையாள அட்டையை மறந்துவிட்ட வந்த நீட் தேர்வு மாணவி:
திருவள்ளூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவர் அசல் அடையாள அட்டையை மறந்து விட்டு வந்த நிலையில் அவருக்கு காவல் துறை அதிகாரி ஒருவர் செய்த உதவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் திருவள்ளூரில் உள்ள கல்லூரி ஒன்றில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி அசல் அடையாள அட்டையை வீட்டிலேயே மறந்துவிட்டு வந்தது தெரியவந்தது
 
இதனை அடுத்து அந்த மாணவி கதறி அழுத நிலையில் இதுகுறித்து அங்கிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர் அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் அசல் அடையாள அட்டையை வீட்டில் மறந்துவிட்டு வந்ததை கூறினார்
 
இதனை அடுத்து தனது இருசக்கர வாகனத்தில் மாணவியின் தாயாரை அழைத்துச் சென்று அசல் அடையாள அட்டையை எடுத்து வந்து கொடுத்து உதவி செய்தார். இதனையடுத்து அந்த காவல்துறை அதிகாரிக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாதிப்பு எண்ணிக்கைக்கு இணையாக குணமானோர் எண்ணிக்கை: இன்றைய கொரோனா நிலவரம்