Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதிப்பு எண்ணிக்கைக்கு இணையாக குணமானோர் எண்ணிக்கை: இன்றைய கொரோனா நிலவரம்

பாதிப்பு எண்ணிக்கைக்கு இணையாக குணமானோர் எண்ணிக்கை: இன்றைய கொரோனா நிலவரம்
, ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (18:38 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 5693 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 502,759 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 5693 பேர்களில் 994 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  5,02,759 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 74 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 8381ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 5717 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கைக்கு இணையாக குணமானோர் எண்ணிக்கையும் உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 447,366 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 82,387 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,01,399 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வு மூலம் கீழ்த்தர அரசியல்: எச்.ராஜா கண்டனம்