நடிகர் விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது போன்று நேற்று மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் விஜய் சம்பந்தமாக பொய்யான செய்தி பரப்புவோர் மீது சட்டப்பட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார்.
அதில், ரூ.150 க்கு எடிட் செய்து பொய்யான தகவல்கள் பரப்பி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் விஜய் விஜய்யயின் பெயர்க்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் நடவடிக்கை எடுக்கப்படும்… இந்த மாதிரியான ஒரு பொறுப்பே இல்லை. இதற்கும் மக்கள் இயக்கத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று கூறி எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் விஜய்யை அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து நாளிதழில் வெளியான செய்தியைப் போல் போஸ்டர் வடிவமைத்து ஒட்டிய விவகாரத்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜய் மக்ககள் இயக்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பத்ரி சரவணன் என்பவர் நடிகர் விஜய்க்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் இயக்க வழக்கறிஞர் அணி சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.