Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 13 January 2025
webdunia

நடராஜனின் சமீபத்திய புகைப்படம் - உண்மை நிலை என்ன?

Advertiesment
நடராஜனின் சமீபத்திய புகைப்படம் - உண்மை நிலை என்ன?
, வியாழன், 2 நவம்பர் 2017 (13:09 IST)
சசிகலாவின் கணவர் நடராஜனின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.


 

 
கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவரை பார்க்க பரோல் கேட்டு சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்து விட்டு சென்றார் சசிகலா. 
 
முன்னதாக நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. அதன்பின், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 

webdunia

 

 
அந்நிலையில், மருத்துவர்களுடன் நடராஜன் அமர்ந்திருக்கும் புகைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், அவர் மருத்துவர்களுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
 
இந்த புகைப்படத்தைப் பார்க்கும் போது, அவர் பூரண குண நலம் பெற்றுவிட்டார் எனத் தெரிகிறது. ஆனால் அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டாரா இல்லை மருத்துவமனையிலேயே இருக்கிறாரா என்பது பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரன் அணிக்கு ஆப்பு வைத்த ஐகோர்ட் முடிவு