Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகுலிடம் மூதாட்டி சொன்னதை அப்படியே உல்டாவாக்கிய நாராயணசாமி… இணையத்தில் பரவும் வீடியோ

Advertiesment
ராகுலிடம் மூதாட்டி சொன்னதை அப்படியே உல்டாவாக்கிய நாராயணசாமி… இணையத்தில் பரவும் வீடியோ
, வியாழன், 18 பிப்ரவரி 2021 (08:18 IST)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புதுச்சேரிக்கு நேற்று வந்திருந்தார்.

புதுவையில் கடந்த கடந்த சில ஆண்டுகளாக முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் கவர்னர் கிரண்பேடி ஆகிய இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது என்பதும் இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்து கொண்டிருந்தனர் என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா செய்ததையடுத்து புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக கூறப்பட்டது.  இவை ஒருபுறம் இருக்க, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திடீரென நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி அரசியலில் அடுக்கடுக்கான திருப்பங்கள் அரங்கேறி வரும் பரபரப்பான சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நேற்று புதுச்சேரி வந்தார்.

அப்போது மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்களில் கலந்துகொண்டார். அப்போது காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமியும் உடன் இருந்தார். அப்போது ஒரு பாட்டி ‘மீனவ மக்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறோம். புயல் பாதிப்பின் போது யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை, ஏன் அவரே (நாராயணசாமி) வரவில்லை ‘ எனக் கூறினார். அதை ஆங்கிலத்தில் ராகுலுக்கு மொழிபெயர்த்த நாராயணசாமி ’புயல் பாதிப்பின் போது நான் வந்து அவர்களைப் பார்த்ததைப் பற்றி கூறுகிறார்’ எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது சம்மந்தமான வீடியோ இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிப்.25 முதல் தேமுதிகவில் விருப்பமனு அளிக்கலாம்: விஜயகாந்த்