Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்திரிக்கை கொடுப்பது போல வந்து கொள்ளை! – நாமக்கலில் சிக்கிய நூதன கும்பல்!

Advertiesment
பத்திரிக்கை கொடுப்பது போல வந்து கொள்ளை! – நாமக்கலில் சிக்கிய நூதன கும்பல்!
, செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (14:05 IST)
நாமக்கலில் பத்திரிக்கை கொடுப்பது போல வந்து வீட்டில் கொள்ளையடிக்கும் கும்பலை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள முருகன் கோவில் பேருந்து நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. கோழி வியாபாரியான இவர் சமீபத்தில் மனைவியுடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டை உடைத்து நுழைந்த கும்பல் பீரோவில் இருந்த பணம் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது..

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரி மோகனூர் அருகே 6 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அந்த கொள்ளையர்களில் மூன்று பேர் பெண்கள் தனியாக உள்ள வீடுகளை தொடர்ந்து கண்காணிப்பார்களாம். மருந்து விற்பனை பிரதிநிதி, ஆன்லைன் டெலிவரி பாய் போல அடிக்கடி அந்த வீடுகளை கண்காணிக்கும் அவர்கள் ஆள் இல்லா சமயம் பத்திரிகை கொடுக்க வரும் உறவினர் போல சென்று உள்ளே நுழைந்தவுடன் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடிப்பார்களாம்.

பல இடங்களில் இதுபோன்று கைவரிசை காட்டிய இந்த கூட்டம் தற்போது போலீஸில் சிக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5,000 ஆண்டுகள் பழமையான மதுபான ஆலை எகிப்தில் கண்டுபிடிப்பு