Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

இதெல்லாம் அநியாயம்ங்க.. எங்களுக்கு ஓட்டுக்கு காசு தரல! – ராசிபுரத்தில் மக்கள் போராட்டம்!

Advertiesment
Tamilnadu
, திங்கள், 5 ஏப்ரல் 2021 (15:21 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்குக்கு பணம் தரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.’

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் வாக்குக்கு பணம் தர முயன்ற கட்சியினரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்துள்ளதோடு, பணம் பரிசு பொருள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வாக்குக்கு பணம் தரவில்லை என பொதுமக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு செல்ல, போலீசை கண்டதும் மக்கள் நாலா திசையிலும் சிதறி ஓடியுள்ளனர். அதில் ஐந்து பேரை பிடித்த போலீஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுபாட்டில்களுடன் கைப்பற்றப்பட்ட ரூ.1.06 லட்சம் - அதிமுக மாதேஸ்வரன் கைது!