Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் சிறையில் நளினி தற்கொலை முயற்சி: அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (10:36 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி திடீரென நேற்று இரவு தற்கொலைக்கு முயன்றதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி திடீரென துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்
 
நளினிக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் இந்த பிரச்சனையின் காரணமாக அந்த பெண் கைதி சிறை அதிகாரியிடம் புகார் அளித்ததாகவும், சிறை அதிகாரி நளினியை விசாரித்ததால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது
 
28 ஆண்டுகளாக சிறையில் மனதளவில் திடமாக இருந்து வரும் நளினி திடீரென தற்கொலைக்கு முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

முதலாளியுடன் மனைவியை உடலுறவுக்கு வற்புறுத்திய கணவன்.. மறுத்ததால் முத்தலாக்

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. 2026 தேர்தலுக்கு ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments