Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகள் திருமணத்துக்காக ஒருமாதம் பரோல் – வேலூரில் தங்குகிறார் நளினி !

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (11:22 IST)
27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினிக்கு அவரது மகளின் திருமணத்துக்காக ஒருமாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இன்னமும் தமிழர்களின் கோரிக்கையை ஏற்காமல் மௌனம் காத்து வருகிறது.

இந்நிலையில் சிறையில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் நிலையில் தனது மகள் திருமணத்திற்கான வேலைகளை செய்ய வேண்டும் எனக் கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ‘ எனது தூக்குத்தண்டனை 2000 ஆம் ஆணு ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. அதன் பின் சிறையில் இருக்கும் ஆயுள்கைதிகளில் 10 ஆண்டுக்கும் சிறை தண்டனை அனுபவித்தர்கள் 3700 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரோல் வழங்க விதிகள் உள்ளன. ஆனால் எனக்கு இதுவரை ஒருமுறைக் கூட பரோல் வழங்கப்படவில்லை. எனவே எனது மகளின் திருமணத்தை முன்னிட்டு எனக்கு 6 மாத காலம் பரோல் வழங்கவேண்டும்’ என நளினி தெரிவித்துள்ளார்.

இதை எதிர்த்து நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய அவருக்கு ஒருமாதம் பரோல் வழங்க சிறை நிர்வாகம் ஒத்துக்கொண்டுள்ளது. இந்நிலையில் இப்போது அவர் தங்க இருக்கும் இருப்பிடம் பற்றிய விசாரணை நடந்து வருகிறது. நளினிக்கு அவரது தாய் பத்மாவும், இன்னொரு உறவினர் பெண்ணும் ஜாமீன் வழங்கியுள்ளனர். இந்த ஒருமாதக் காலத்தில் நளினியின் மகள் ஹரித்ராவின் திருமணம் வேலூரிலேயே நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் நளினி சிறையில் இருந்து வெளியில் வருவார் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments