Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 4 April 2025
webdunia

நக்கீரன் கோபாலுக்கு மருத்துவ சோதனை- ஸ்டாலின் மருத்துவமனை வருகை

Advertiesment
நக்கீரன் கோபால்
, செவ்வாய், 9 அக்டோபர் 2018 (13:50 IST)
இன்று அதிகாலை சென்னை விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால் மருத்துவப் பரிசோதனைக்காக திருவல்லிக்கேணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை சென்னையிலிருந்து புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நக்கீரன் கோபாலை அடையாறு சரக போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின் காலை முதல் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அவரைப் பார்க்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சந்திப்பு மறுக்கப்பட்டதால் அங்கேயே தர்ணா செய்த வைகோ வையும் காவல்துறை கைது செய்தது.

பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் ஆளுநர் குறித்து நக்கீரன் பத்திரிக்கை ஒரு தொடர் வெளியிட்டு வருகிறது. அந்தக் தொடர் ஆளுநர் மீது அவதூறு பரப்பும் வகையிலும் ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும் உள்ளதால் ஆளுநர் தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்ப்ட்டுள்ளார் என காவல்துறை சார்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் கோபால் கைதை ஒட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் கணடனம் தெரிவித்து வருகின்றனர். டிடிவி தினகரன் மட்டும் கோபால் கைதுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக திருவல்லிக்கேணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவரைப் பார்ப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் ‘நக்கீரன் கோபால் மீது பாய்ந்துள்ள சட்டம் ஏன் பாஜக –வின் எஸ் வி சேகர் மீதும் ஹெச் ராஜாவின் மீதும் பாயவில்லை’ எனக் கேள்வியெழுப்பினார்.

நக்கீரன் கோபால் மீது சட்டப்பிரிவு 124 ஏ-ன் கீழ் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை ஜாமீன் அற்ற சிறைதண்டனை அளிக்க முடியும் எனவும் சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றிவிட்டு உயிர் நீத்த பெண்