நாகை கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் அபிநயா தன்னுடைய துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடியை சேர்ந்த 29 வயது அபிநயா, நேற்று இரவு முதல் நாகை கருவூல அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதையடுத்து சக காவலர்கள் சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். விசாரணையில், அவர் துப்பாக்கியால் கழுத்து பகுதியில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து சக போலீசார் கூறுகையில், தற்கொலை செய்துகொண்ட காவலர் அபிநயா, சமீபத்தில் வினோத் என்பவருடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும், அவரது மறைவை தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.