Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரும்பு விவசாயி சின்னம்: சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி மனு

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (19:48 IST)
சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ள நிலையில் மற்ற கட்சிகளின் சின்னங்களை விட கரும்பு விவசாயி சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மங்கலாக இருப்பதாக சீமான் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின்போது குற்றஞ்சாட்டியிருந்தார்.
 
இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் 'கரும்பு விவசாயி' சின்னத்தை தெளிவாக புதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இதுகுறித்து தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், 'என்னை எதிர்கொள்ள முடியாமல் என்னுடைய சின்னத்தை மங்கலாக்கிவிட்டார்கள். விவசாயி சின்னத்தில் கூட வாழக்கூடாது என்று நினைக்கின்றனர். வாக்காளர்களே! வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த சின்னம் மங்கலாக இருக்கின்றதோ, அதில் உங்கள் வாக்கை செலுத்துங்கள்' என்று கூறினார்

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments