Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் vs பாஜக – அதிமுக கூட்டணியில் குழப்பம் !

Webdunia
சனி, 28 செப்டம்பர் 2019 (08:41 IST)
புதுச்சேரியில் போட்டியிடுவதற்கு அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுவதால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் நாங்குநேரி தொகுதியை பாஜக கேட்க அதிமுக மறுத்ததால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவளிக்காதா என்ற கேள்வி எழுந்தது.

இதுசம்மந்தமாக பாஜக ஆதரவளிக்கும் கட்சிதான் வெல்லும் எனப் பொன்னார் சொல்ல, எங்களுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளுக்கு மட்டுமே ஆதரவுக் கேட்டுள்ளோம் என ஓபிஎஸ் சொல்ல அதிமுக- பாஜக கூட்டணி இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பாண்டிச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள என் ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவும் விருப்பமனுக்களைப் பெற்று வேட்பாளர்களிடம் நேர்காணல் செய்து வருகிறது. இதனால் அதிமுக கூட்டணி இந்த இடைத்தேர்தலுக்கு தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

நடுவரின் தவறான தீர்ப்பு.. கால்பந்து போட்டியில் கலவரம்.. 100 பேர் பரிதாப பலி..!

புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி திடீர் மரணம்.. காவல்துறை தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments