Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு – உள்கட்சிப் பூசலை சமாளிப்பாரா ?

Webdunia
சனி, 28 செப்டம்பர் 2019 (08:24 IST)
நாங்குநேரி தொகுதிக்கான காங்கிரஸின் வேட்பாளராக ரூபி மனோகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளான திமுக- காங்கிரஸ் தங்களுக்குள் தொகுதி பங்கீடு செய்து கொண்டுள்ளன. அதன்படி விக்கிரவாண்டியில் திமுகவும் நாங்குநேரியில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் மட்டும் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதமாக்கிக் கொண்டு வந்தது.

இந்நிலையில் காங்கிரஸும் நேற்றிரவு வேட்பாளரை அறிவித்துவிட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன், உட்பட 26 பேர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்த நிலையில் ரூபி மனோகரனைத் தேர்வு செய்துள்ளது காங்கிரஸ் தலைமை.

நாங்குநேரி தொகுதியில் வெளிமாவட்ட வேட்பாளரை நிறுத்தக் கூடாது என நெல்லை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் தமிழ்ச்செல்வன் போர்க்கொடி தூக்கியுள்ளார். வெளிமாவட்டத்திலிருந்து வேட்பாளர்களை நிறுத்தினால் கட்சியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுவோம்’ எனக் கூறியுள்ளார். இந்நிலையில் கன்னியாகுமர் மாவட்டத்தைச் சேர்ந்த ரூபி மனோகரன் நிறுத்தப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments