சென்னை பள்ளிக்கரணையில் சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ, பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது லாரி ஏறியதில் அவர் பரிதாபமாக பலியானார். இதனையடுத்து அந்த பேனரை தயாரித்த கடைக்கு சீல் வைக்கபட்டது. ஆனால், அந்த பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் தலைமறைவானார்.
இந்நிலையில், செப்டம்பர் 14 ஆம் தேதி சுபஸ்ரீ மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் ஜெயகோபால் தலைமறைவானார்.
இதனைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்ட நீதிமன்றம் குற்றவாளியான ஜெயகோபாலை எப்போது கைது செய்வீர்கள் எனக் கேள்வி எழுப்பி, கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று, கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல ரிசார்டில் பதுங்கியிருந்த ஜெயகோபாலை போலீஸார் கைது செய்துள்ளனர்.