Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியுடன் அதிமுக எம்.எல்.ஏ சந்திப்பு: பெரும் பரபரப்பு

Advertiesment
ரஜினியுடன் அதிமுக எம்.எல்.ஏ சந்திப்பு: பெரும் பரபரப்பு
, புதன், 30 அக்டோபர் 2019 (21:17 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி, அரசியல் களத்தில் குதிக்க இருப்பதாக தெரிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர் அதிகாரபூர்வமாக அரசியல் கட்சியை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை 
 
இருப்பினும் அவர் அரசியல் கட்சிக்கான பணிகளை 90% முடித்து விட்டதாகவும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள நிலையில் அவர் 2020 ஆம் ஆண்டு இறுதியில் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்காத நிலையிலேயே அவரை அனைத்து கட்சியின் பிரபலங்கள் அவ்வப்போது சந்தித்து அரசியல் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மயிலாப்பூர் தொகுதியின் அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான நடராஜ் அவர்கள் இன்று ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தார் 
 
இந்த சந்திப்பின் போது தனது மகனின் திருமண அழைப்பிதழை ரஜினிகாந்த் அவர்களுக்கு கொடுத்து திருமணத்திற்கு வருகை தரும்படி நட்ராஜ் அவர்கள் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் திருமணத்திற்கு கண்டிப்பாக வருவதாக தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் அவர்களை அதிமுக எம்எல்ஏ ஒருவர் திடீரென சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஎஸ்ஐஸ் இயக்கத் தலைவரை காட்டிக்கொடுத்த உளவாளிக்கு ரூ 177 கோடி பரிசு !