Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் ஸ்டாலினுக்கு என் வாழ்நாள் நன்றிகள்- அமைச்சர் செந்தில் பாலாஜி டுவீட்

Advertiesment
முதல்வர் ஸ்டாலினுக்கு என் வாழ்நாள் நன்றிகள்- அமைச்சர் செந்தில் பாலாஜி டுவீட்
, வியாழன், 29 செப்டம்பர் 2022 (15:33 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் தன் கட்சியில் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகிறார்.

திமுக உட்கட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்  செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கியது.,மாவட்ட செயலாளர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகள்  நியமிக்கப்பட்டு வருகின்றனர்.  முக்கியப் பதவிகளான தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு வரும் அக்டோபர் 9 ஆம் தேதி ததேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில்,  கரூர், தேனி,  மதுரை ஆகிய மாவட்ட தலைவர்களை முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார்.

webdunia

கரூர் மாவட்ட செயலாளராக அமைச்சர்  செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார், இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

கரூர் மாவட்ட செயலாளராக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய,  கழகத்தலைவர், நாடு போற்றிட நல்லாட்சி புரியும் நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி@mkstalin அவர்களுக்கு, என் வாழ்நாள் நன்றிகளை பணிவுடன் சமர்ப்பித்து வணங்குகிறேன்  எனத் தெரிவித்துள்ளார்.

தேனி வடக்கு மாவட்ட செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் தேனி வடக்கு மாவட்ட செயலாளராக தேர்வு செய்த கழக தலைவர் மாண்புமிகு முதல்வர் தளபதி@mkstalin அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக  ஜி தளபதி  நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய,  கழகத்தலைவர் - மக்கள் போற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் @mkstalin அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு; அரசின் முடிவை வரவேற்கின்றேன்.- சீமான்