என்கவுண்டர்ல்ல கொல்ல போறாங்க, என் மகனை காப்பாற்றுங்க.. நேற்றே வெளியான ரவுடி பெற்றோர் வீடியோ..!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (14:30 IST)
இன்று அதிகாலை இரண்டு ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் நேற்று இரவே என் மகனை என்கவுண்டர் செய்யப் போகிறார்கள், அவரை காப்பாற்றுங்கள் என்று ரவுடி முத்து சரவணன் தாயும் தந்தையும் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
இன்று அதிகாலை செங்கல்பட்டு அருகே நடந்த என்கவுண்டரில் ரவுடி முத்து சரவணன் உள்பட 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது 
 
போலீசாரை தாக்கி விட்டு ரவுடிகள் தப்பிக்க முயன்றதாகவும் போலீசார் தற்காப்புக்காக ரவுடிகளை சுட்டதாகவும் போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 
இந்த நிலையில் நேற்று இரவு ரவுடி முத்து சரவணன் பெற்றோர்  உருக்கமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது அந்த வீடியோவில் அவர்கள் கூறியிருப்பதாவது
 
என் புள்ள தப்பானவன்னு தெரியாது ஐய்யா... அவனை சுட போறாங்கன்னு சொல்றாங்க.. காப்பாத்துங்க ஐய்யா.. என அவர்கள் பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments