Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்த மன்னிப்பு: கெத்து காட்டிய முருகதாஸ்

எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்த மன்னிப்பு: கெத்து காட்டிய முருகதாஸ்
, புதன், 28 நவம்பர் 2018 (16:35 IST)
தீபாவளி அன்று விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களை எரிப்பது போன்றும், அரசை விமர்சிப்பது போன்றும் வசனங்கள் இருந்தன.  
 
இதனால் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால், மறுதணிக்கை செய்யப்பட்டு படத்தில் இருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு கருதி இயக்குனர் முருகதாஸ் நவம்பர் 9 ஆம் தேதி முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 
 
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சர்கார் படத்தில் இலவசங்களை தூக்கி எரிந்ததற்கும், அரசை விமர்சிக்கும் வசங்களை வைத்ததற்கும் மன்னிப்பு கோர வேண்டும் எனவும், அதோடு இனி வரும் தனது படங்களில் அரசியல் காட்சிகளோ அரசை விமர்சிக்கும் காட்சிகளோ இடம்பெறக்கூடாது என உத்தரவாதம் பத்திரம் சமர்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  
webdunia
இதற்கு முருகதாஸ் இன்று பதில் அளித்துள்ளார், அதாவது, அரசின் இலவசங்களை விமர்சனம் செய்ததற்கு மன்னிப்பு கேட்ட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதோடு திரைப்படத்தில் காட்சிகளை அமைப்பது எனது கருத்து சுதந்திரம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 
 
இதனால், முருகதாஸ் கைது செய்யப்படுவதை சென்னை உயர்நீதிமன்றம் மேலும் இரண்டு வாரங்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும், டிசம்பர் 13 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 
 
முருகதாஸ் மன்னிப்பு கேட்ட முடியாது என கூறியது அவரது இயக்கத்தில் வெளியான ரமணா படத்தின் வசனமான எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்த மன்னிப்பு என்பதை நினைவுபடுத்துவதாக உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாயுடன் உடவுறவு கொண்ட ஓல்டு மேன் .... ‘அந்த கசமுசா காட்சி ‘ இணையதளத்தில் அம்பலம்...