Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"மீண்டும் பாசிசம் முறியடிக்கப்படும்" - சர்காருக்கு ஆதரவு தந்த கமல்!

, புதன், 28 நவம்பர் 2018 (12:06 IST)
"சர்கார் விவகாரம்" குறித்து மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் . 
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸான சர்கார் திரைப்படம் அதிக சர்ச்சைகளை சந்தித்தது. பொதுவாக விஜய் படங்களுக்கு வரும் பிரச்னை தான் என்றாலும், சர்கார் கதை திருட்டு என ஆரம்பித்து அதன் பிறகு நடந்த அனைத்துமே சர்ச்சையோ சர்ச்சை ரகம் தான். 
 
அரசின் இலவச திட்டங்களை விமர்சித்திருப்பதால், சர்கார் வெளியான அனைத்துத் திரையரங்கிலும் ஆளுங்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நீதி மன்றத்தை நாடிய ஏ.ஆர்.முருகதாஸை நவம்பர் 27-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தனர் நீதிபதிகள். 
 
அந்த காலம் முடிந்திருப்பதால், மீண்டும் அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது,  'சர்கார்' படத்தில் அரசுத் திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்,  எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில், அரசின் திட்டங்களையும் அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்திரவாத பத்திரம் தாக்கல்செய்ய வேண்டும். தவிர அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் வாதிட்டார் அரசு தரப்பு வழக்கறிஞர்.
 
இதனால், முருகதாஸிடம் விளக்கம் பெறுமாறு அவரது வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு (28.11.18) ஒத்தி வைத்திருக்கிறார்கள் நீதிபதிகள். 
 
இந்நிலையில், முருகதாஸுக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கும் நடிகர் கமல், "தணிக்கைக் குழுவால் சான்றிதழ் வழங்கப்பட்ட படம் சர்கார். ஆனால் அரசு, மக்களின் கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த நினைக்கிறது. இது ஜனநாயகமல்ல. முன்பைப் போலவே மீண்டும் ஃபாசிசம் முறியடிக்கப்படும்" என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெர்மனியில் ஹெலிகாப்டர் நிறுவனத்தினருடன் அஜித் ஆலோசனை