Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாத்தான்குளம் காவலர்கள் இன்று இரவுக்குள் கைது செய்ய வாய்ப்பு: பரபரப்பு தகவல்

Advertiesment
சாத்தான்குளம் காவலர்கள் இன்று இரவுக்குள் கைது செய்ய வாய்ப்பு: பரபரப்பு தகவல்
, புதன், 1 ஜூலை 2020 (20:27 IST)
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் கடை திறந்து வைத்திருந்ததால் விசாரணைக்காக காவல் நிலையத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு விடிய விடிய அவர்கள் அடித்து கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
காவல்துறையின் இந்த அத்துமீறல் குறித்து தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்த மதுரை ஐகோர்ட் இந்த வழக்கு குறித்து சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அவற்றில் ஒன்று இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் உடனடியாக ஏற்று நடத்த வேண்டும் என்பது தான் 
 
இந்த நிலையில் இன்று காலை வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் உடனடியாக களத்தில் இறங்கி சாத்தான்குளத்தில் நேரடியாக சென்று விசாரணை செய்து வருகின்றனர். ஒரே நேரத்தில் பல குழுக்களாகப் பிரிந்து விசாரணை செய்து வருவதால் இந்த வழக்கின் முடிவு ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது
 
இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் தரப்பில் இருந்து வெளி வந்த தகவலின்படி இன்று இரவுக்குள் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு காரணமான இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி