Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முல்லைப் பெரியாறு விவகாரம் - கருணாநிதி விளக்கம்

முல்லைப் பெரியாறு விவகாரம் - கருணாநிதி விளக்கம்

Advertiesment
முல்லைப் பெரியாறு விவகாரம் - கருணாநிதி விளக்கம்
, சனி, 25 ஜூன் 2016 (21:30 IST)
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள ஆளுநர் உரைக்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
 

 
கேரளாவின் இன்றைய முதல்வர் பதவிப் பொறுப்பேற்றவுடன் பிரச்சினையின் அனைத்துப் பரிமாணங்களையும் ஆராய்ந்தறிந்த பின்னர் கூறியவாறு தான், உச்ச நீதி மன்றம், முல்லைப் பெரியாறு அணையிலே நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்த வழக்கில், 27-2-2006 அன்று வழங்கிய தீர்ப்பில், “முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது” என்று தெரிவித்திருக்கின்றது.
 
உச்ச நீதி மன்றத் தீர்ப்பிலும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கேரள முதலமைச்சர் பதவிப் பொறுப்பேற்றவுடன் அனுபவம் மற்றும் அறிவாற்றலின் அடிப்டையில் கூறிய கருத்திலும் முழு நம்பிக்கை வைத்து மேற்கொண்டு ஆற்ற வேண்டிய தொடர்பணிகளை நிறைவேற்றிட ,மத்திய அரசும், தமிழக கேரள மாநில அரசுகளும் உடனடியாக ஆவன செய்ய முன் வர வேண்டும்.
 
அதுதுடன், அதற்கான தொடக்க முயற்சிகளை தமிழக அரசு தாமதப்படுத்தாமல் மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதியை கொலை செய்தது கூலிப்படை - அதிர்ச்சி தகவல்