Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6400 இறப்புகளுக்கு எடப்பாடி அரசே பொறுப்பு: கனிமொழி ட்விட்!!!

6400 இறப்புகளுக்கு எடப்பாடி அரசே பொறுப்பு: கனிமொழி ட்விட்!!!
, திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (13:32 IST)
6400 கொரோனா இறப்புகளுக்கு எடப்பாடி அரசே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என கனிமொழி ட்விட். 

 
கனிமொழி இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, கொரோனாவுக்கு எதிரான போரில், பாலின பேதமின்றி, அரசியல் காழ்ப்பின்றி, சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்து பணியாற்றுதல் அவசியம். நாட்டிலேயே, மிகச் சிறந்த மருத்துவ உட்கட்டமைப்பு இருந்தும் 22 ஆகஸ்ட் அன்று, தமிழகம் 6400 இறப்புகளை எட்டியுள்ளது.
 
இது முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமி அரசு, 2021 தேர்தலை மனதில் வைத்து அதிமுக அரசின் சாதனையாக கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சித்தரிப்பதே காரணம். 6400 இறப்புகளுக்கு எடப்பாடி அரசே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோமாவுக்கு போன கொரிய அதிபர்; ஆட்சியில் சகோதரி! – என்ன நடக்கிறது வட கொரியாவில்?