கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது. 
	
 
	கொரோனா பாதிப்புகளால் பலர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியதால் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது. 
	 
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 40,024 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 
	 
	இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 72 ரூபாயாக விற்கப்படுகிறது.