Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தத்தெடுத்த தாய்க்கு துரோகம்... பலகோடி பணம் மோசடி...காதல் ஜோடி கைது...

Advertiesment
தத்தெடுத்த தாய்க்கு துரோகம்... பலகோடி பணம் மோசடி...காதல் ஜோடி கைது...
, திங்கள், 25 பிப்ரவரி 2019 (12:54 IST)
குமரி மாவட்டம் களியக்காவிளைக்கு அருகே உள்ள பளுகல் மூவோட்டுகோணம் பகுதியை சேந்தவர் ஜெயக்குமாரி. இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. 
இந்நிலையில் தனக்குத் துணையாக இருக்க வேண்டி ஸ்ரீநயா (19) என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்து வந்தார். ஸ்ரீநயா களியக்காவிளையில் உள்ள ஒருகல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
 
இந்நிலையில் நீட் தேர்வுக்காக விண்ணப்பப்படிவம் வாங்கி வருவதாக சென்றனர் திரும்ப வீட்டுக்கு  திரும்பவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும்வீட்டில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரம், வங்கி லாக்கர் சாவி அதன் ரகசிய நம்பர் மற்றும் பல லட்ச ரூபாய் நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு ஜெயக்குமாரி அதிர்ச்சி அடைந்தார்.
 
இதனையடுத்து ஜெயக்குமாரி பளுகல் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் அதன் பின்னர் விசாரணையை துரிதப்படுத்தினர். அந்த விசாரணையில் ஸ்ரீநயா பனச்சமூடு பகுதியை சேர்ந்த ஷாலு(23)  என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது. ஸ்ரீநயா, ஷாலுவுடன் சேர்ந்து சென்றிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகித்தனர்.
 
இதையடுத்து பாறசாலை போலீஸாரிடம் தஞ்சமடைந்த காதல் ஜோடியை நீதிபதியிடம் ஆஜர் படுத்தினர். அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்ரீநயா தெரிவித்ததாவது:
 
ஜெயக்குமாரியுடன் ஸ்ரீநயா அடிக்கடி வங்கிக்குச் சென்று வந்ததால் வங்கி ஊழியர்கள் என்னை நம்பி நகையை எடுக்க அனுமதித்தார்கள். அதனால் வங்கியில் இருந்து 30 பவுன் நகையை எடுத்துவிட்டு என் காதலன் ஷாலுவுடன் ஊரைவிட்டுச் செல்ல நினைத்தோம். அதற்குள்ளாக காவல் துறையிடம் மாட்டிக்கொண்டோம். இவ்வாறு தெரிவித்தார்.
 
ஸ்ரீநயாவை தத்தெடுத்த ஜெயக்குமாரியைப் போன்றே வங்கியினரும் நகை மோசடி  விவகாரத்தில் ஸ்ரீநயா மீது புகார் கொடுக்கப்பட்டதால் போலீஸார் விரைந்து சென்று காதல் ஜோடியை கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேமுதிகவை இழக்க அதிமுக முடிவு – கூட்டணி குறித்து அமைச்சர் சூசகப்பதில் !