Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை கொல்ல உப்புமாவில் விஷம் வைத்த கொடூர தாய்!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (13:28 IST)
குழந்தைகளை கொல்ல உப்புமாவில் விஷம் வைத்த கொடூர தாய்!
தான் பெற்ற குழந்தைகளை கொல்வதற்காக உப்புமாவில் விஷம் வைத்து கொலை செய்ய முயன்ற தாய் ஒருவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக குழந்தைகளுக்கு உணவில் விஷம் வைத்துக் கொலை செய்ய அவர் முடிவு செய்தார்
 
இதனை அடுத்து அவர் உப்புமா தயாரித்து அதில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தார். இந்த உப்புமாவை சாப்பிட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் மற்றொரு குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் பெற்ற குழந்தைகளுக்கு உணவில் விஷம் வைத்துக் கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

காஷ்மீரில் கொல்லப்பட்ட லஷ்கர் தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள்: ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா..!

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments