பிள்ளைகளைக் கொன்று தாயும் தற்கொலை – மனநலம் பாதித்தவரா ?

புதன், 14 ஆகஸ்ட் 2019 (15:20 IST)
திருநெல்வேலியில் தான் பெற்றக் குழந்தைகளைத் கொலை செய்து பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த தம்பதிகள் மைக்கேல் மற்றும் மாரியம்மாள். இவர்களுக்கு சக்தி அனுசியா என்ற மகளும் துரைசிங் என்ற மகனும் உள்ளனர். மாரியம்மாள் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிசிச்சைகள் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வீட்டில் குழந்தைகள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் தலையணையை குழந்தைகளின் மேல் அழுத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவத்தில் சக்தி வீட்டில்யே உயிரிழக்க மகன் துரை சிங் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்

 இதையடுத்து வீட்டுக்கு வந்த மாரியம்மாள் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாரியம்மாள் இதற்கு முன்பும் தனது மூத்த மகளை சாப்பாட்டில் எறும்பு மருந்து வைத்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் டைட்டானிக் கப்பல் மூழ்கிய காலத்தில் வாழ்ந்த சுறா! இன்னும் உயிரோடுதான் இருக்கு...