சென்னையில் பெற்ற மகளின் ஆபாச புகைப்படங்களை செல்போன் மூலம் தாய்-தந்தை விற்பனை செய்து வருமானம் ஈட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் சிறுமியின் ஆபாச புகைப்படங்கள் வாட்ஸப் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், இது குறித்து விசாரணை செய்த போது அந்த சிறுமியின் தாய் மற்றும் தந்தையை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
சிறுமியுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட இரண்டு பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. அவர்களில் ஒருவர் சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவர் என்றும், இன்னொருவர் தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் என்றும் இருவர் மீதும் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிறுமியை உல்லாசத்திற்கு ஈடுபடுத்தியது அவர்களுடைய பெற்றோர்களே என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர்களையும் போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரகசியமாக மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் போலீசாரின் பாதுகாப்பில் இருப்பதாகவும் தெரிகிறது.
வாட்ஸப் மூலம் சிறுமியின் ஆபாச புகைப்படங்களை, அவருடைய பெற்றோரே பணத்திற்காக விற்பனை செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.