மழை காரணமாக சென்னையில் காய்கறிகள் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை தொடர்ந்து வரும் நிலையில் காய்கறிகளின் விலை அதிகரித்தது. இந்நிலையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொடர் மழை காரணமாக உயர்ந்துள்ள காய்கறிகளின் விலையை குறைக்கவும், நடமாடும் காய்கறி கடைகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் 48,000 நடமாடும் காய்கறி கடைகள் பத்தே நாட்களில் அமைக்கப்பட்டது. அதே போன்று காய்கறிகள், பழங்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட கூட்டுறவுத்துறை மூலமாக அரசு நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.