Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தக்காளி விலை ரூ.90 முதல் ரூ.100க்கு விற்பனை

தக்காளி விலை ரூ.90 முதல் ரூ.100க்கு விற்பனை
, திங்கள், 8 நவம்பர் 2021 (12:22 IST)
சென்னையில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.90 முதல் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை தொடர்ந்து வரும் நிலையில் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. தக்காளி வரத்து குறைவாக இருக்கும் நிலையில் தேவை அதிகமாக உள்ளதால் விலை ஏற்றம் கண்டுள்ளது.
 
கடந்த சில வாரத்தில் கிலோ ரூ.35 விற்று வந்த தக்காளி விலை உயர்வால் ரூ.60 ஆக விற்பனை ஆனது. இது கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.80க்கு விற்பனையானது. இந்த திடீர் விலையேற்றம் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
சென்னையில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.90 முதல் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளிக்கு முன்பு வரை ரூ.70க்கு விற்ற தக்காளி மழை காரணமாக ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோகத்தில் முடிந்த இசை விழா கொண்டாட்டம்! – 8 ரசிகர்கள் பலி!