தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைத்து வரும் நிலையில் இந்த உரிமை தொகை கிடைக்காதவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் மேல்முறையீடு செய்த 1.48 லட்சம் மகளிர்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டு விட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியான நிலையில் தற்போது மேல்முறையீடு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட அனைத்து மகளிர்களுக்கும் இந்த மாதமே பணம் வந்துவிடும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வரும் நிலையில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட 1.48 லட்சம் மகளிர்களுக்கும் இம்மாதம் 15 ஆம் தேதி முதல் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து மகளிர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே ஒரு கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கூடுதலாக 1.48 லட்சம் மகளிரர்களுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.