Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜக வினர் சுமார் 60 க்கும் மேற்பட்டோர் கைது !

பாஜக வினர் சுமார் 60 க்கும் மேற்பட்டோர் கைது !
, செவ்வாய், 11 ஜனவரி 2022 (23:38 IST)
திமுக ஆட்சியில் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் போது ? நிகழ்ச்சியை அவமதித்த காவல்நிலைய ஆய்வாளர் பாஜக வினர் சுமார் 60 க்கும் மேற்பட்டோர் கைது | மதிய உணவு அருந்தாமல் காவல்நிலைய ஆய்வாளருக்கு கண்டனம் தெரிவித்து தொடர் முழக்க மிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக வினரால் பரபரப்பு.
 
கரூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் மாநிலத்தலைவர் அண்ணாமலை ஜி உத்திரவு பெற்று மாபெரும் ஆர்பாட்டம் நட்த்தப்படும் கரூர் மாவட்ட தலைவர்  வி.வி.செந்தில்நாதன் அதிரடி பேட்டியளித்துள்ளார்.
 
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், திட்டங்களை துவக்கி வைக்க பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சென்ற போது, அங்கு போலி விவசாயிகள் பெயரில் காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமானோர் மோடி அவர்களின் நிகழ்ச்சிக்கு களங்கம் ஏற்படுத்த சாலைமறியல் செய்துள்ளனர். இதனையடுத்து சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்று அம்மாநில டிஜிபி யும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து கூட்டு சதி செய்தநிலையில், இந்த சம்பவத்திற்கு பல்வேறு மாநிலங்களில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

பல்வேறு மாநில முதல்வர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக அளவில், பாஜக இளைஞரணி சார்பில் ஆங்காங்கே ஆர்பாட்டங்களும், மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்பாட்டங்களும் நட்த்தப்பட்டது. கரூரிலும் சுமார் 200 நபர்களுக்கும் மேல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆர்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சியின் ஒ.பி.சி பட்டியல் அணி சார்பில், பஞ்சாப் சம்பவத்தினை கண்டித்து ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டது. கரூரிலும், கரூர் திண்ணப்பா கார்னர் அருகே பஞ்சாப் அரசினை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினை கண்டித்தும் ஆர்பாட்டம் நடத்தப்படுமென்று, கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் வி.வி.செந்தில்நாதன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கரூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் செந்தூர்பாண்டியன், அந்த இடத்தில் அனுமதி இல்லை என்று மறுத்ததோடு, நீங்கள் கலைந்து செல்லவும் என்று காவல்நிலைய ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் பாஜக நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வந்ததற்கு டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதையாவது செலுத்தி விட்டு செல்லலாமே என்று கருதி., அங்கேயே அவரது (டாக்டர் அம்பேத்கர் அவர்களின்) திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் மாலை அணிவிக்க முற்பட்ட போது, அதனை காவல்நிலைய ஆய்வாளர் தடுத்ததோடு, அனைவரையும் வலுக்கட்டாயமாகவும், குண்டுகட்டாகவும் கைது செய்துள்ளனர். பாஜக கட்சி சார்பில் 4 பெண்கள் உள்ளிட்ட 61 நபர்களை கைது செய்ததோடு., அவர்களை ஒரு தனியார் திருமண மஹாலில் தங்க வைத்தனர். தமிழகம் முழுவதும் பாஜக கட்சியின் ஒ.பி.சி பட்டியல் அணி சார்பில் ஆங்காங்கே ஆர்பாட்டம் நடத்திய போது கரூரில் மட்டும் தான், இந்த கைது சம்பவம் அரங்கேறியது. இந்நிலையில், பாஜக மகளிரணி பெண்களை காவல்துறையினர் நாகரீகமற்ற முறையில் கைது செய்தது, ஒரு சில பாஜக பிரமுகர்களை கைது செய்யும் போது, பேரிகார்டுகள் மோதி ரத்தம் வழிந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு, மதிய உணவு அருந்தாமல், கண்டனம் தெரிவித்ததோடு, டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்க முயற்சித்த போது, அந்நிகழ்ச்சியை அவமதிக்கும் பொருட்டு நடந்து கொண்ட நகர காவல்துறை ஆய்வாளர் செந்தூர்பாண்டியனை கண்டித்து தொடர் ஆர்பாட்டங்கள் திருமண மண்டபத்திலேயே நடத்தினர். பின்னர் 6 மணிக்கு விடுவிக்கப்பட்ட நிலையில், பாஜக சார்பில் வாங்கப்பட்ட உணவுப்பொட்டலங்களை மட்டுமே உண்ட பாஜக பிரமுகர்கள், அனைவரும் திருமண மண்டபத்தினை விட்டு வெளியேறினர். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த, கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன், சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிக்க முயன்ற போது, ஜாதிவெறியுடன், கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் செயல்பட்டதாகவும், ஆகவே அவரை சட்டரீதியாக தாழ்த்தப்பட்டோர் மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும், கரூரில் நடந்த செயலுக்கு பெருமளவில் கண்டனம் தெரிவித்த, பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன், தலைவர் அண்ணாமலை அவர்களின் அனுமதி பெற்று பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். திமுக ஆட்சியில் மறைந்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்பட்த்திற்கு மாலை அணிவிக்க கூட விடாமல் தடுத்த காவல்துறையினரின் செயல் இப்பகுதியில் பெருமளவில் பரபரப்பு ஏற்பட்டது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 15 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!