Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென்னிந்தியாவிலேயே இந்தி அதிகம் கற்பவர்கள் தமிழர்கள்தான்: திமுகவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

தென்னிந்தியாவிலேயே இந்தி அதிகம் கற்பவர்கள் தமிழர்கள்தான்: திமுகவை கலாய்க்கும் நெட்டிசன்கள்
, வியாழன், 20 செப்டம்பர் 2018 (22:32 IST)
தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் இந்தி கற்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் திமுகதான். திமுகவே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்தான் வளர்ச்சி கண்டது. ஆனால் திமுகவில் உள்ள முக்கிய புள்ளிகளும், கருணாநிதியின் குடும்பத்தில் உள்ளவர்களும் தவறாமல் இந்தியை கற்று கொண்டனர்.

இப்போதும் திமுக இந்தி எதிர்ப்பு கொள்கையை கடைபிடித்து வருகிறது. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழி கொள்கையைத்தான் அக்கட்சி பின்பற்றி வருகிறது. இதனால் தமிழகத்தில் இந்தியை நுழைக்க விடாமல் செய்துவிட்டதாக அக்கட்சி அவ்வப்போது மார்தட்டி கொள்வதும் உண்டு.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள செய்தி திமுகவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். அதாவது தமிழகத்தில் இந்தி மொழி கற்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தென்னிந்தியாவிலேயே இந்தி கற்பதில் தமிழகம் தான் முதலிடம் வகிப்பதாகவும் இந்தி பிரச்சார சபா பொதுச்செயலாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

webdunia
மேலும் இந்தி பிரச்சார சபா துவங்கி 100 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதன் நூற்றாண்டு விழா டெல்லியில் வருகிற 22ஆம் தேதி கொண்டாப்பட உள்ளதாக அவர் கூறினார். இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த செய்தி நிச்சயம் திமுகவிற்கு அதிர்ச்சியை தரலாம். திமுகவின் இந்தி எதிர்ப்பை மக்கள் கண்டுகொள்ளவில்லை என்பதையே இந்த செய்தி உறுதி செய்கிறது. இந்த செய்தியை வைத்து நெட்டிசன்கள் திமுகவை கலாய்த்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழிசைக்கு வரலாறே தெரியவில்லை: திமுக கடும் தாக்கு