Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்ட்ரல் ரயில் நிலைய எல்இடி திரைகளில் அதிக விளம்பரங்கள்: பயணிகள் அவதி..!

சென்ட்ரல் ரயில் நிலைய எல்இடி திரைகளில் அதிக விளம்பரங்கள்: பயணிகள் அவதி..!
, திங்கள், 25 டிசம்பர் 2023 (14:46 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய எல்இடி திரையில் அதிக விளம்பரம் வைக்கப்படுவதால் ரயில்கள் அட்டவணையை பார்ப்பதில் சிரமம் இருப்பதாக பயணிகள் புகார் அளித்துள்ளனர். 
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வடமாநிலங்களுக்கும் மற்ற நகரங்களுக்கும் ஏராளமான ரயில்கள் தினசரி சென்று கொண்டிருக்கின்றன. ரயில்களின் அட்டவணை குறித்த தகவல்கள் அறிவதற்காக எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த திரைகளில் பெரும்பாலும் விளம்பரங்கள் ஒளிபரப்பாவதால் ரயில்கள் குறித்த தகவல்களை அறிவதில் சிரமம் இருப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.  
 
இது குறித்து பயணி ஒருவர் கூறிய போது, ‘விளம்பரங்களை முதலில் நிறுத்த வேண்டும். ரயில் கிளம்பும் 5 நிமிடத்துக்கு முன்பு கூட திரைகளில் இரண்டு, மூன்று விளம்பரங்களை பார்த்தபிறகு தான் ரயில் விவரங்களை காண முடிகிறது. இதனால் சரியான நேரத்துக்கு நடைமேடைகளுக்கு செல்ல முடிவதில்லை. 
 
விளம்பரத்தால் ரயில்வே துறைக்கு வருமான கிடைப்பது சரிதான் என்றாலும் அதற்குகேற்ப விளம்பரங்களை அளவாக, பயணிகளை பாதிக்காதவாறு இடம்பெற செய்தல் வேண்டும். அல்லது விளம்பரங்களை குறைவாக திரையிட வேண்டும்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்த பேடிஎம்.. AI டெக்னாலஜியால் பாதிப்பு என தகவல்..!