பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடித்துள்ள சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான். இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரித்துள்ளார். கே ஜி எஃப் இசையமைபபாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு நேற்று இந்த படம் ரிலீஸ் ஆனது. பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களுக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களை திருப்திப் படுத்தாததால் இந்த படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, இந்தியா முழுவதும் அதிக அளவிலான திரைகளில் ரிலீஸ் ஆனது.
இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் நாளில் 175 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் முதல் மூன்று நாட்களில் இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு உலகளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த திரைப்படம் எளிதாக 1000 கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.