Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Advertiesment
udhayanithi stalin
, வெள்ளி, 8 டிசம்பர் 2023 (16:04 IST)
மிக்ஜாம் புயலின் காரணமாக கனமழை பெய்த பகுதிகளில் பொதுமக்களின் உடல்நலனை காக்கின்ற வகையில்,  முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன’’ என்று அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்று  வெள்ளத்தால் ஒட்டுமொத்த சென்னையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில் அரசுடன் இணைந்து, தன்னார்வலர்கள், சினிமாத்துறையினர் உள்ளிட்  பலரும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்த நிலையில், ‘’மிக்ஜாம் புயலின் காரணமாக கனமழை பெய்த பகுதிகளில் பொதுமக்களின் உடல்நலனை காக்கின்ற வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன’’ என்று அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘அந்த வகையில்,  சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை நக்கீரன் தெருவில் நடைபெற்ற மருத்துவ முகாமை இன்று நேரில் ஆய்வு செய்தோம். முகாமிற்கு வருகை தந்த பொது மக்களிடம் அவர்களின் உடல்நலன் குறித்து கேட்டறிந்தோம். அனைத்து வகையிலும் கழக அரசு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் செயலாற்றிடுமென உறுதியளித்தோம்’’என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

150 சவரன் நகை, BMW கார் வரதட்சணை கேட்ட காதலன் குடும்பத்தினர்.. மணமகள் தற்கொலை