அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
சமீபத்தில் மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டு உள்ள நிலையில் மழை இன்னும் குறைந்தபாடில்லை.
சென்னை உள்பட பல பகுதிகளில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த ஒன்பது மாவட்டங்கள் பின்வருமாறு:
1. சென்னை
2. செங்கல்பட்டு
3. சிவகங்கை
4. ராமநாதபுரம்
5. புதுக்கோட்டை
6. தஞ்சை
7. திருவாரூர்
8. நாகை
9. மயிலாடுதுறை
Edited by Mahendran